Sampath's Blog

Welcome to Sampath's blog at Sampath.com. You will generally find humor here, except some postings about how to improve Tamil Nadu.

Friday, February 25, 2005

தூய தமிழ்

தூய தமிழ் பேசுபவர்களை கிண்டலடிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயத்தில் தூய தமிழில் தான் பேச வேண்டும் என்று அடம் பிடிப்பதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

என்னைக் கேட்டால் தமிழ் அகராதியை இரண்டாக பிரிக்கலாம் என்று சொல்லுவேன். 'சங்க தமிழ்' மற்றும் 'வளர் தமிழ்'.

தூய தமிழை நேசிப்பவர்களிடம் சங்கத் தமிழை ஒப்படைக்கலாம். பேச்சு தமிழை உபயோகிக்கிறவர்களிடம் வளர் தமிழை ஒப்படைக்கலாம்.

இந்த வளர் தமிழ் என்பது வளைந்து கொடுத்து வளரும் தமிழாக இருக்க வேண்டும். அதாவது நாம் அன்றாடம் பயன் படுத்தும் பிற மொழி வார்த்தைகள் அப்படியே தமிழ் படுத்தப்பட்டு, இந்த வளர் தமிழில் சேர வேண்டும்.

உதாரணத்துக்கு, பஸ், கார், ஏரோப்ளேன் போன்ற வார்த்தைகள் வளர் தமிழ் வார்த்தைகளாக அங்கிகரிக்க பட வேண்டும். சங்க தமிழாளர்கள், இதனையே தூய தமிழ் படுத்தி, பேருந்து, மகிழ்வுந்து, விமானம் என்று அழைக்கட்டும்.

ஆனால் ஒரு மனிதன் சங்க தமிழ் பேசுவதா இல்லை வளர் தமிழ் பேசுவதா என்பது அவன் முடிவாக இருக்கட்டும்.

சரி கடைசியாக ஓரிரு தூய தமிழ் வாக்கியங்கள்:
"நான் அலுவலகத்தை விட்டு வரும் பொழுது என் மகிழ்வுந்து பாதி வழியிலே நின்று விட்டது. ஆதலால் நான் இறங்கி நின்று பேருந்து ஏதாவது வருமா என்று காத்திருந்தேன். ஆனால் அவ்வழியே ஒரு துள்ளுந்து வந்தது. கையை காட்டி அதில் ஏறிக்கொண்டேன். அந்த துள்ளுந்தில் ஒரு குறுந்தகடோட்டி ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாடல்களை கேட்டு கொண்டு வீடு போய் சேர்ந்தேன்"

மேலே சொன்னது யாருக்கவது சரியாக புரிந்ததா? புரிந்தால் என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.

"நான் அலுவலகத்தை விட்டு வரும் பொழுது என் மகிழ்வுந்து (CAR) பாதி வழியிலே நின்று விட்டது. ஆதலால் நான் இறங்கி நின்று பேருந்து ஏதாவது வருமா என்று காத்திருந்தேன். ஆனால் அவ்வழியே ஒரு துள்ளுந்து (JEEP) வந்தது. கையை காட்டி அதில் ஏறிக்கொண்டேன். அந்த துள்ளுந்தில் ஒரு குறுந்தகடோட்டி (CD PLAYER) ஓடிக்கொண்டு இருந்தது. அதில் பாடல்களை கேட்டு கொண்டு வீடு போய் சேர்ந்தேன்"

Thursday, February 24, 2005

தமிழ் நாட்டை முன்னேற்ற - விவசாயம்

பெரிய பெரிய நிறுவனங்கள் ஒவ்வொன்றும், ஒரு குறைந்த பட்ச அளவாவது, சிறு விவசாய நிலங்களை தத்தெடுத்து விவசாயத்தை வளர்க்க வேண்டும்.

அவ்வாறு செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் செய்யும் விவசாயத்தை அளவாக கொண்டு, அரசு அதற்கேற்றார் போல் வரிவிலக்கு அளிக்க வேண்டும். விவசாயத்தில் புதுப்புது டெக்னாலஜிகளை கண்டுபிடிக்க ஊக்கமளிக்க வேண்டும். இதற்காக சிறு நிலங்களை வைத்திருக்கும் விசாயிகளிடம் இருந்து நிலங்களை பிடுங்க கூடாது. அவர்களையும் அரவணைத்து செல்ல வேண்டும்.

விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால், ஒரு கம்ப்யூட்டர் நிறுவனம் வருடத்துக்கு 2 கோடி வரி கட்டுகிறதென்று வைத்துக்கொள்வோம். அவர்களை வருடத்துக்கு 10 லட்சத்தை விவசாயத்தில் இன்வெஸ்ட் செய்ய சொல்லலாம். மீதி 1.9 கோடியை மட்டும் வரியாக கட்ட சொல்லலாம்.

அந்த 10 லட்சம் இன்வெஸ்ட்மெண்ட்டில் அவர்களுக்கு லாபம் வந்தால், அதில் கூட வரிவிலக்கு அளிக்கலாம்.