நகைச்சுவை: நாட்டு நடப்பு


"பஞ்சாயத்து கூட்டி, தண்டனை தருவதை தடுக்க சட்டம் வருகிறது - செய்தி"


முதலாளி பொண்ணை காதலிச்சதுக்காக, நம்ப முனியனை ஏழு நாள் மரத்துல கட்டி வைக்குமாறு பஞ்சாயத்துல தீர்ப்பு சொன்னாங்களே. என்னாச்சு? 

தீர்ப்பு சொன்னவங்களை ஏழு வருஷம் ஜெயில்ல போட்டுட்டாங்களாம்.
------ 

நாட்டாமை அடிக்கடி சென்னைக்கு போறாரா. ஏனாம்? 

எத்தனை நாள் தான் பஞ்சாயத்து பண்ணாம சும்மா இருக்கிறது. அதனால தான் சென்னைக்கு அடிக்கடி போய் அங்க நடக்கிற 'கட்டை பஞ்சாயத்துக்கெல்லாம்' அட்வைஸரா இருக்கிறாராம்.
------


என்னது, ஆட்டை திருடினா வழக்கமா நம்ப பஞ்சாயத்துல 5000 ரூபாய் தான் அபராதம் போடுவாங்க. இப்ப திடீர்னு 7500 ஆக்கிட்டாங்களா? 

ஆமாம். பஞ்சாயத்தை கண்டுக்காம இருக்கிறதுக்காக, நம்ப ஏரியா போலிஸ் இன்ஸ்பெக்டருக்கு 2500 கொடுத்துடுவாங்களாம்.
----- 

நேத்து நாட்டாமையும், அவரு கூட இருக்கிற மத்த பெருசுங்களும் என்னை அடிக்க வந்துட்டாங்க. 

நீ என்ன பண்ணினே? 

என் ஆடு திருடு போயிடுச்சு. பஞ்சாயத்தை கூட்டுங்கன்னு சொன்னேன்.
----- 

நாட்டாமை. தீர்ப்பை மாத்து. 

யோவ். அவரு ராத்திரியே வீட்டை மாத்திட்டு போயிட்டாரு. பஞ்சயத்து பண்ணதுக்காக அவரை போலிஸ்தேடுதாம். 
-------

Comments