நரி

ஒரு ஊருல ஒரு பாட்டி இருந்தாங்க. அவங்க நிறைய வடையை சுட்டுகிட்டு பக்கத்து ஊருக்கு எடுத்துகிட்டு போய் வித்து வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.

பக்கத்து ஊருக்கு போகிற வழியில ஒரு காடு இருந்தது. அந்த காட்டை தினமும் கடந்துதான் இவங்க பக்கத்து ஊருக்கு போக முடியும். காட்டை கடக்குற வழியில ஒரு பெரிய ஆலமரம் இருந்தது. அதுல இவங்க தினமும் கொஞ்ச நேரம் தூங்கிட்டு தான் பக்கத்து ஊருக்கு போவாங்க.

ஒரு நாள் அப்படி தூங்கிகிட்டு இருக்கும் போது, ஒரு காக்கா வந்தது. வடைகளை பார்த்தது. "ஆஹா! இன்னைக்கு முழுதும் நம்ப சாப்பாட்டு பிரச்சினை தீர்ந்தது"ன்னு நினைச்சுகிட்டே, நைஸா பறந்து ஒரு வடையை வாயால கவ்வி எடுத்துகிட்டது.

அப்படியே கொஞச தூரம் பறந்து போயி, யாரும் இல்லாத இடமா பார்த்து, ஒரு மரத்துல உட்கார்ந்தது. அப்ப அந்த பக்கம் ஒரு நரி வந்தது. காக்கா வாயில இருந்த வடையை பார்த்தது. உடனே அதுக்கும் வடை சாப்பிடனும்னு ஆசை வந்திடுச்சு.

அதனால, அந்த காக்காவை பார்த்து நரி சொல்லியது, "காக்கா..! காக்கா..! நீ ரொம்ப அழகா இருக்கே. ஒரு பாட்டு பாடேன்" என்று.

தன்னை அழகுன்னு நரி சொன்னதும் காக்காவுக்கு ரொம்ப பெருமை தாங்கவில்லை. உடனே அது உச்சஸ்தாயில பாட ஆரம்பிச்சதது. அவ்வளவு தான். வடை 'டொம்னு' கீழ விழுந்தது.

நரி வடையை எடுத்துக்கொண்டது.

காக்காவுக்கு மனசு தாங்கலை. இப்படி ஏமாந்துட்டமேன்னு அழுதது. அப்ப நரி சொல்லியது,

"காக்கா..! காக்கா..! நான் ஒண்ணும் உன்னை ஏமாத்த வரலை. இந்த வடை உனக்கு எங்க கிடைச்சதுன்னு மட்டும் சொல்லிடு. நான் உனக்கு இதை திருப்பி கொடுத்துடறென்" என்று.

காக்காவும் சொல்லியது. நரியும் வடையை திருப்பி கொடுத்தது.

கொடுத்திட்டு அவசர அவசரமா ஆலமரத்தடிக்கு வந்தது. அந்த பாட்டி இன்னும் தூங்கிகிட்டு இருந்தாங்களாம்.

நரி, மெதுவா கிட்ட போய் ஒரு வடைக்கு பதிலா பத்து வடையை எடுத்துகிட்டு போய் சாப்பிட்டது.


நீதி:
ஒண்ணும் தெரியாதவன் ஒரு ஐடியாவை யூஸ் பண்ணி ஒரு ரூபா சம்பாரிச்சா, பலதும் தெரிஞ்சவன், அதே ஐடியாவை யூஸ் பண்ணி பத்து ரூபா சம்பாரிப்பான்.





Comments

  1. Anonymous12:58 PM

    paravaille pa
    sampath, madurai

    ReplyDelete

Post a Comment