நகைச்சுவை: பொழுது போகலைன்னா ஃபோன்ல...


(பொழுது போகலைன்னா ஃபோன்ல இப்படி எல்லாம் பேசலாமுங்களா? - ஒரு கற்பனை)


"ஹலோ. என்ன இன்னும் யாரும் கல்யாணத்துக்காக ஊருக்கு கிளம்பளையா? சீக்கிரம் எல்லோரும் கிளம்புங்க சார். அப்புறம் பஸ்ஸை மிஸ் பண்ணிடப்போறீங்க. 

"தோ கிளம்பிட்டோம். ஆமாம், நீங்க யாரு சார் பேசறது? 

"நான் இந்த ஏரியா திருடன் சார்" 
-----------------------
"ஹலோ. அனந்தராமன் சார் வீடுங்களா?

"இல்லீங்க. இது அனந்தராமன் சார் ஃபோனுங்க" 
---------------


"ஹலோ.  வைத்தியலிங்கம் சார் வீடுங்களா? 

"கன்ஃபர்ம்டா தெரியலீங்க. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க. வீட்டு பத்திரத்தை பார்த்துட்டு சொல்றேன்"
-----------


"ஹலோ. நாங்க கோயம்புத்தூர்ல இருந்து பேசறோம்ங்க" 

"அப்படீங்களா. நாங்க சென்னையிலிருந்து கேட்கிறோம்ங்க" 
-----------


"ஹலோ. ஏஜிஸ் ஆஃபீஸூங்களா?" 

"தெரியலீங்க. நான் இன்னைக்குத்தான் வேலைக்கு சேர்ந்திருக்கேன்" 
------------


"ஹலோ. மன்னாரன் கம்பெனிங்களா? உங்க ஸ்டெனோ ஸ்டெல்லா கிட்ட கொஞ்சம் பேசனும்" 

"'பார்க்'லியா 'பீச்'லயா?" 
------


"ஹலோ. 98410 555555வா ?" 

"இல்லை. இது Nokia 6160" 
----------


"ஹலோ. 555 6274 ங்களா?" 

"ஆமாங்க" 

"ரொம்ப நேரமா 555 6275 க்கு ட்ரை பண்றோம். லைன் கிடைக்கல. அதான் அதுக்கு அடுத்த நம்பரான உங்களுக்கு ஃபோன் பண்றோம். உங்க கிட்ட விஷயத்தை சொன்னா ஒரு தபா ஓடிப்போய் அவங்க கிட்ட சொல்லிட்டு வந்துடுவீங்களா?" 
---------


"ஹலோ. 555 5252 ங்களா?" 

"ஆமாங்க. உங்களுக்கு என்ன வேணும்ங்க" 

"ஒண்ணும் இல்லீங்க. எங்க ஃபோன்ல 5ம் 2ம் வேலை செய்யுதான்னு டெஸ்ட் பண்ணி பார்த்தேனுங்க" 
--------------------


"ஹலோ. அப்போலோ ஆஸ்பத்திரியா. உங்ககிட்ட காலுக்கு வைத்தியம் பார்க்கிற கால் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் யாராவது இருக்காங்களா?" 

"இருக்காங்க. என்ன பிராப்ளம்ங்க" 

"எங்க ஃபோனுக்கு அடிக்கடி கால் வருதுங்க.  
---------------


"ஹலோ. நடிகை அல்பா ரெட்டியா? உங்களை ஒரு பேட்டி எடுக்கலாமா?" 

"முடியாதுங்க. இன்னைக்கு நான் ஸ்டிரிக்ட் மவுனவிரதத்துல இருக்கிறேங்க" 
-----------------------


"ஹலோ. ராங் நம்பரா?" 

" ??? "
-------------------

Comments