நகைச்சுவை: மன்னர் ராஜமன்னார்


மந்திரி: மன்னா. பக்கத்து நாட்டு பேரரசர் நம்பளை கப்பம் தான் கட்ட சொன்னாரே தவிர கப்பலெல்லாம் கட்ட சொல்லலை. எதுக்கும் பயப்படாம இன்னொரு தடவை தைரியமா கேட்டு சரி பாத்துடுங்க!
----0---- 

மந்திரியாரே! நமது அண்டை நாட்டு மன்னர் ராஜமன்னாரிடமிருந்து ஏதோ அவசர ஓலை வந்திருக்காமே? என்ன விஷயமாம்? 

ஒண்ணுமில்லை அரசே. அவர் மேல யாரோ திடீர்னு படையெடுத்து வந்திருக்காங்களாம். இத்தனை நாளா அவரு ஒண்ணும் பண்ணாம, நிறைய நொறுக்கு தீனி தின்னுகிட்டு இருந்ததால கொஞ்சம் உடம்பு ஏறிடுச்சாம். அதனால நம்ப கிட்ட ஏதவது 'டபுள்-எக்ஸ்-எல்' சைஸ்ல மார்பு கவசம் இருந்தா உடனே கடனா கொடுத்தனுப்ப முடியுமான்னு கேட்டிருக்காரு.
----0----


மந்திரி: மன்னா. வாழ்க்கையில இப்பதான் முதன் முறையா போருக்கு போறீங்க, சரி. ஆனா அதுக்காக மார்பு கவசத்துல 'எல் போர்டு' போட்டுகிட்டுதான் போவேன்னு அடம் பிடிக்கிறது அவ்வளவா சரியில்லீங்க.
----0----


நம்ப மன்னர் நேத்து முழுக்க மகாராணியிடம் 'தர்ம அடி' வாங்கினாராமே? எதுக்கு?

 பின்னே? 'பெண்களின் கூந்தலில் மணம் இருப்பது இயற்கையாகவா அல்லது செயற்கையாகவான்னு' பொத்தாம் பொதுவா கேட்கிறதை விட்டுட்டு, 'மகாராணி மற்றும் அரண்மனை வேலைக்காரிகளின் கூந்தல்களில் மணம் இருப்பது இயற்கையாகவா அல்லது செயற்கையாகவான்னு' தண்டோரா போடச்சொன்னா எந்த பொண்டாட்டிக்கு தான் கோவம் வராது?
----0---- 

மன்னா! நம்ப அரண்மனை வரைபடத்தை கொஞ்சமாவது முயற்சி பண்ணி மனப்பாடமா வைச்சுக்க ட்ரை பண்ணுங்க. நீங்க பாட்டுக்கும் நீச்சல் குளம்ன்னு நினைச்சு, முதலைங்க இருக்கிற அகழியில குதிச்ச விஷயம் வெளிய தெரிஞ்சா, ஜனங்க உங்களை ரொம்ப கேவலமா நினைப்பாங்க
---0---


மன்னா! என்ன பண்றது. அரண்மனைக்குள்ள இன்னைக்கு கொஞ்சம் புழுக்கம் ஜாஸ்தி தான். அதுக்காக வெறும் லுங்கி பனியனோடு வந்து சிம்மாசனத்துல உட்கார்ந்திருப்பது அவ்வளவா நல்லாயில்லை.
---0--- 

சே! நமது மன்னரோட ரசனை இவ்வளவு மட்டமா இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. 

ஏன்? என்னாச்சு? 

நேத்து வைச்ச வெண்பா போட்டியில 'மன்மதராசா மன்மதராசா மச்சான் மனசை கிள்ளாதே'ன்னு, அவரை புகழ்ந்து பாடிய பெண் புலவருக்குத்தான் முதற்பரிசு தரணும்னு அடம் பிடிச்சாரே. அதைத்தான் சொல்றேன்.
---0---

மன்னர் ஏன் சோகமா உட்கார்ந்திருக்கார்? 

நேத்து ராத்திரி இவரு மாறுவேஷத்துல ஊருக்குள்ள போன சமயம் பார்த்து, ஒரு த்¢ருடன் இவரை மாதிரியே வேஷம் போட்டுகிட்டு வந்து இவருடைய மணிமகுடத்தை சுட்டுகிட்டு போய்ட்டானாம்.
---0--- 

பொற்கொல்லன் 1: நம்ப ராஜ்ஜியத்து கஜானாவுல பணம் இல்லைன்னு சொல்றது உண்மைதான் போல. 

பொற்கொல்லன் 2: ஏன் அப்படி சொல்ற? 

பொற்கொல்லன் 1: நேத்து நம்ப ராஜா என்னை தனியா கூப்பிட்டு தனக்கொரு மணிமகுடம் செய்து தருமாறு சொன்னாரு. ஆனா பணம் மட்டும் இரண்டு வருட இன்ஸ்டால்மெண்டுல தரட்டுமான்னு தலையை சொறிஞ்சுகிட்டே கேட்டாரே.
---0--- 

என்னது. நமது அரண்மனை குருகுலத்தின் தலைமை ஆசிரியர் வந்து, நம்ப மன்னரைப் பார்த்து ஏதோ வேகமா சொல்லிட்டு போனாராமே? 

ஒண்ணுமில்லை. நம்ப மன்னர், நேத்து நமது இளவரசருக்கு வீட்டு கணக்கு பாடம் முடிக்க ஹெல்ப் செய்கிறேன்னு சொல்லிகிட்டு தப்பு தப்பா சொல்லி கொடுத்திருக்காரு. இது தெரிஞ்ச தலைமை ஆசிரியர், 'நீ படிக்கும் போதுதான், ஒவ்வொரு சப்ஜெக்ட்லியும் முட்டை முட்டையா வாங்கி கிழிச்சே. உன் பிள்ளையும் அந்த மாதிரி ஆக்கிடாதேன்னு' திட்டிட்டு போயிருக்காரு.
---0--- 


அண்டை நாட்டு மன்னர்: 'என்னிடம் போரிட வா' என்று நமது அண்டை நாட்டு மன்னன் ராஜமன்னாரிடம் தகவல் அனுப்பினேனே. அவன் ஏதாவது பதில் அனுப்பினானா? 

அனுப்பியுள்ளார் அரசே. ஆனால் தன் படையிடம் அந்தளவு கத்தி, கேடயம்லாம் இல்லையென்றும், நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி கொஞ்சம் இரவல் கொடுத்தீங்கன்னா, அதை வாங்கி நமக்கெதிராகவே சண்டையில யூஸ் பண்ணிட்டு, அப்புறம் திருப்பி தந்துடறேன்னு சொல்லியிருக்கின்றார்.
---0---


மகாராணியார் ரொம்ப கோவமா இருக்காங்களாமே? 

ஆமாம். நமது மன்னர் மாறுவேஷத்துல இரவு வலம் போறேன்னு சொல்லிட்டு, இத்தனை நாளா 'ரெக்கார்டு டான்ஸ்' க்கு போய்ட்டு வந்துட்டிருக்கார்னு இப்பத்தான் கண்டு பிடிச்சாங்களாம்.
---0--- 

மன்னா. முதல் முதலா இப்பத்தான் ரெண்டு மூணு சிற்றரசர்களை ஜெயித்து நமக்கு கப்பம் கட்ட வைத்திருக்கிறோம். அதுக்காக அவங்க கப்பம் கட்ட வரும் போதெல்லாம், 'ஒரு ஐந்தோ, பத்தோ, கொஞ்சம் மேல போட்டு கொடுங்க'ன்னு நீங்க கேட்கிறது அவ்வளவா நல்லாயில்லை.
---0---

மன்னரின் சந்தேகத்தை தீர்த்து வைக்க வந்த புலவர், மன்னர் சொன்ன பதிலைக் கேட்டுட்டு சபையிலே மயக்கம் அடிச்சு விழுந்துட்டாராமே? 

பின்னே! இலக்கிய தமிழ்னா கிலோ என்ன விலைன்னு கேட்கிறவர் நம்ப ராஜா. இது தெரியாம, புலவர் பாட்டுக்கும் இலக்கிய தமிழ்ல 'கொங்குதேர் வாழ்க்கை'ன்னு பாடும்போது, 'நீங்க இப்படியெல்லாம் எனக்கு புரியாத ஹிந்தி மொழியில பாடமால் தமிழ்லேயே பாடுங்கன்னு' இடையில மன்னர் சொல்லியிருக்காரு. அதான்.
---0---

ராஜமன்னார்: மந்திரியாரே! அண்டை நாட்டு மாமன்னன் பரகேசரி நம்மீது மிகவும் கோபம் கொண்டுள்ளானாமே? 

மந்திரி: ஆம் அரசே. எல்லாம் தாங்களாவே தங்கள் கைப்பட எழுதிய ஓலைதான் காரணம். அதில் 'அன்புள்ள பரகேசரி'ங்கிறதுக்கு பதிலா 'அன்புள்ள ரவாகேசரி'ன்னு எழுதியிருக்கீங்களாம்.
  ---0---

 By
Sampath
(The above jokes were written around the year 2005, I guess)

Comments