ஏன்யா லேட்டு? - ஒரு உரையாடல்

வாய்யா. ஏன் லேட்டு?

லேட்டாயிடுச்சு சார்.

அது தெரியுது. ஆனா, ஏன்யா லேட்டு?

ம்..ம்ம்..

யோவ் என்னாய்யா முணுமுணுன்னு? இன்னைக்கு காலெஜுல என்னோட பீரியட் முத பீரியட்ன்னு தெரியுமில்லே?


தெரியும் சார்?

அப்புறம் ஏன்யா லேட்டு?

பஸ் லேட்டாயிடுச்சி சார்.

பஸ் லேட்டா? தோ, இந்த கணேசனும் முகுந்தனும் உன் கூட படிக்கிற பசங்க தானே? அவங்களும் உன் ஏரியாவுல இருந்து தானே வர்றானுங்க?

ஆமா சார்?

அவனுங்க மட்டும் எப்படி ஒழுங்கான நேரத்துக்கு வந்தாங்க?

அவங்க பஸ் சீக்கிரம் வந்திடுச்சு சார்.

அப்படி ஒன்னும் தெரியலையே? அவனுக என்னைக்கும் சரியான நேரத்துல வந்திடறாங்களே.

ஆமா சார். அவங்க பஸ் என்னைக்குமே சீக்கிரம் வந்திடும் சார்.

அப்படீன்னா நீயும் அந்த பஸ்ஸிலே தினமும் வர வேண்டியதுதானே?

நிறைய தடவை முயற்சி பண்ணினேன் சார். ஆனா நான் வர்றதுக்குள்ள அந்த பஸ் பஸ்-ஸ்டாண்டை விட்டு கிளம்பிடுது சார்.

அப்படீன்னா நீ அந்த பஸ் ஸ்டாண்டுக்காவது சீக்கிரம் போக வேண்டியது தானே?

சீக்கிரம் தான் சார் போய் பார்த்தேன். ஆனா?

என்ன ஆனா?

ஆனா லேட்டாயிடுது சார்.

ஆண்டவா..! உன்னோட மல்லு கட்டிகிட்டு என்னால நேரத்தை வீணாக்க முடியாது. தயவு செய்து உள்ள போய் உட்காரு. முடிஞ்சா பாடத்தை கவனி. இல்லைன்னாலும் பரவாயில்லை. ஆளை விடுய்யா.

By Sampath
www.sampath.com
02/24/2015

Comments