நகைச்சுவை - Election time


அறிவிப்பாளர் : "அன்புள்ள பெரியோர்களே, தாய்மார்களே, வட இந்தியாவைச் சேர்ந்த நமது தானைத்தலைவர், இவ்வளவு தூரம் வந்து, தமிழ் நாட்டில் நடக்கும் இந்த தொகுதியின் பாராளுமன்ற தேர்தலிலே போட்டியிடுகிறார் என்பது நமக்கெல்லாம் ஒரு இனிய செய்தியாகும். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால், அவர் ஆங்கிலத்தில் பேசுவார் என்று தெரிவித்துக்கொள்கிறோம். அதை தமிழில் மொழிபெயர்க்க அவருடன் வழக்கமாக வரும் மொழிபெயர்ப்பாளர் இன்று தவிர்க்க இயலாத காரணங்களால் வரவில்லை. ஆதலால் நமது உள்ளூர் இளைஞர் அணியிலே மிக அதிகமாக, எட்டாவது வரை படித்துள்ள மாடசாமி, தலைவரின் பேச்சை தமிழில் மொழிபெயர்ப்பார் என்று தெரிவித்துக்கொள்கிரோம். இப்போது தலைவர் அவர்களை பேச அழைக்கின்றோம். 


தலைவர் : My dear beloved people...
மாடசாமி : அன்பார்ந்த, நான் காதலிக்கும் மக்களே... 

தலைவர் : I came from a poor family
மாடசாமி : நான் ஒரு ஏழைக்குடும்பத்தில் இருந்து வந்தவன். 

தலைவர் : My Father was an Electrician.
மாடசாமி : எனது அப்பா ஒரு மின்சார மனிதன். 

தலைவர் : Yes. An ordinary Electrician.
மாடசாமி : ஆம். ஒரு மிகச் சாதாரண மின்சார மனிதன். 

தலைவர் : I worked hard and became a politician.
மாடசாமி : நான் மிக கடினமாக உழைத்து, அரசியல்வாதியானேன். 

தலைவர் : My enemies tried to kill me.
மாடசாமி : என்னுடைய எதிரிகள் என்னை 'கிள்ள' பார்த்தார்கள். 

தலைவர் : But they cannot kill me.
மாடசாமி : ஆனால் அவர்களால் கிள்ள முடியவில்லை. 

தலைவர் : They always cheat others
மாடசாமி : அவர்கள் எப்போதும் சீட் ஆடுவார்கள். 

தலைவர் : They don't know anything about our country and its current affairs.
மாடசாமி : அவர்களுக்கு நமது நாட்டை பத்தியும், நாட்டில் 'கரெண்ட் ஆஃப்' ஆவதைப் பற்றியும் ஒன்றுமே தெரியாது. 

தலைவர் : They don't even know how to handle a government.
மாடசாமி : அரசுக்கு கைப்பிடி வைப்பது எப்படி என்பதுகூட அவர்களுக்கு தெரியாது. 

தலைவர் : But I can handle for you.
மாடசாமி : ஆனால், என்னால் 'ஹேண்டில் பாரே' வைக்க முடியும். 

தலைவர் : Being a MP is something that I always dreamt off.
மாடசாமி : நான் எம்.பியானால், கனவிலும் கூட 'சம்திங்' வாங்குவேன். 

தலைவர் : If you elect me, a lot of good things will happen to you.
மாடசாமி : என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு நிறைய நன்மைகள் நடக்கும். 

தலைவர் : No matter what happens, Human Rights will be protected.
மாடசாமி : என்ன நடந்தாலும் சரி, மனிதர்களின் 'வலதுபக்கம்' பாதுகாக்கப்படும். 

தலைவர் : At anyday, women can walk in the night without being afraid. 
மாடசாமி : எந்த நாளிலும் பெண்கள் பயமில்லாமல் 'நைட்டி'யுடன் வெளியே செல்லலாம். 

தலைவர் : Unwanted taxes will be dropped.
மாடசாமி : தேவையில்லாத வரிகள் 'போடப்படும்'. 

தலைவர் : People's interests will be protected.
மாடசாமி : மக்களின் 'வட்டிகள்' பாதுகாக்கப்படும். 

தலைவர் : Prices of Televisions will be reduced.
மாடசாமி : டீவியில் வரும் 'பரிசுகள்' குறைக்கப்படும். 

தலைவர் : I will make sure that each and everyone of you is well.
மாடசாமி : நீங்கள் ஒவ்வொருவரும் 'கிணற்றில்' இருக்குமாறு பார்த்துக்கொள்வேன். 

தலைவர் : My election symbol is WELL.
மாடசாமி : எங்களின் தேர்தல் சின்னம், 'கிணறு'. 

தலைவர் : So, please put your votes in WELL.
மாடசாமி : ஆகையால் உங்கள் வோட்டுகளை கொண்டுபோய் கிணற்றில் போடுங்கள். 

Comments