நகைச்சுவை - ஜோக்ஸ்

"அவர் சினிமாவுல பாட்டெழுதி பெரிய கவிப்பேரரசுவாக ஆசைப்பட்டார். ஆனா அது முடியாததால குடிகாரனா மாறிட்டாரு"

"அப்ப கவி'பீர்'ரரசுவா ஆகிட்டாருன்னு சொல்லுங்க"
------------------------------------------------------------------------------------------"நேத்து நீ தண்ணியடிச்சதை உங்கப்பா பார்த்துட்டாருன்னு சொன்னியே, அப்புறம் என்னாச்சு?"

"வேற என்னாச்சு. இதுவரைக்கும் தெண்டச்சோறுன்னு என்னை திட்டிக்கிட்டு இருந்தவரு, இப்ப தெண்ட'பீர்'ன்னு திட்டறாரு"
------------------------------------------------------------------------------------------

"அந்த படத்துல ஹீரோவுடைய தங்கச்சியா வர்றவங்க ஏன் அடிக்கடி விழுந்துகிட்டே இருக்காங்க?"

"அவங்க 'வாழ்க்கையில வழுக்கி விழுந்தவங்க' எங்கிறதைதான் டைரக்டர் அப்படி காட்டுகிறாராம்"
------------------------------------------------------------------------------------------

"முன்னாடி வெறும் பால் வியாபாரம் மட்டும்தான் செய்தேன்ங்க. இப்போ கூடவே லிக்கர் ஷாப் ஒண்ணும் ஓப்பன் பண்ணியிக்கேனுங்க"

"பீர்பால் வியாபாரம் பண்றேன்னு சொல்லுங்க"
------------------------------------------------------------------------------------------

"அம்மா. அப்பா வரலாறு பாடத்துல ரொம்ப மோசம்மா"

"ஏண்டா?"

"முதலாம் பானிபெட் போர் எங்கே நடந்ததுன்னா 'ராணிபெட்'ல நடந்ததுன்னு தப்பு தப்பா சொல்லி தர்றாரும்மா"
------------------------------------------------------------------------------------------

"வாதாபி நகரத்தை கைப்பற்றிய நமது மன்னர் ஏன் தெருத்தெருவா போய் சொக்கப்பானை கொளுத்த சொல்றார்?"

ஒரு அவசரத்துல வாதாபியை தீக்கிறையாக்குகிறேன்னு ராணிகிட்ட சபதம் போட்டுட்டு வந்துட்டாரு. அப்புறம் இங்க வந்து பார்த்தா செலவு கட்டுபடியாகலை. அதான் அங்கங்கே சொக்கப்பானையாவது கொளுத்திடுவோம்னு சொல்லிட்டாரு.

- சம்பத் 13/Sep/2003

Comments