தமிழ்நாட்டை முன்னேற்ற..! - கனவு 1: ரோடு

"இந்த ஊழல் பெருச்சாளிங்களால் தான் நம்ப மாநிலம் முன்னேறாம இருக்கு..."

"அரசியல்வாதிங்க தான் நாட்டை குட்டி சுவராக்குகிறாங்க.."

"ஜனங்க சரியில்லை.."





நம்ப நாட்டை எப்படி முன்னேற்றனும்னு கேட்டா, பெரும்பாலும் மேலே சொன்ன வாக்கியங்கள் தான் பதிலாக வரும். ஆனா, நல்லா யோசிச்சு பார்த்தா, இவையெல்லாம் 'நம்ப நாடு எப்படி கெட்டுப்போய்க்கொண்டு இருக்கிறது"ங்கிறதுக்கான பதில்கள்.

ஒரு வகையில பார்த்தா, இவைகளை சரி செய்தாலே போதும். நாடு முன்னேறிவிடும். ஆனாலும், இந்த கட்டுரையில அவைகளை பற்றி பேசப்போறதில்லை.

சும்மா, என்னென்னல்லாம் நம்ப தமிழ் நாட்டுல (இப்போதைக்கு தமிழ்நாடு மட்டும் - அப்புறம் இந்தியா முழுவதையும் கவர் பண்ணலாம்) இருந்தா ஜாலியா இருக்கும், நல்லா இருக்கும், வசதியா இருக்கும், முன்னேற்றமா இருக்கும்ன்னு பார்க்கலாம்.

நான் பெருமதிப்பு வைச்சிருக்கும் நம்ப ஜனாதிபதி திரு.அப்துல் கலாம் அவர்கள் நம்பளையெல்லாம் கனவு காணச்சொன்னார்கள். நம்ப நாட்டை முன்னேற்றுவதைப்பத்தி நானும் கனவு காணலாம்னு நினைச்சேன். நிறைய கனவுகள் வந்துச்சு.

அதுல ரொம்ப சின்னசின்ன கனவுகள்லேர்ந்து தொடங்குகிறேன்.


ரோடு:

ரொம்ப சிம்பிள். தமிழ் நாட்டிலிருக்கிற முக்கிய நகரங்களை இணைக்கிறதுக்கு ஒரு ரொம்ப அட்வான்ஸ்டான ரோடு வேண்டும். அந்த ரோடு எப்படி இருக்கனும்னா...

* ஆக்ஸிடெண்ட்ங்கிற ஒரு விஷயமே இல்லாமல் இருக்கிற டிஸைன்ல இருக்கனும். சென்னையிலிருந்து 1000 பேர் கிளம்பி மதுரைக்கு போனா, அதுல 999 பேர் பத்திரமா போய் சேர்ந்தாங்க, ஒருத்தர் மட்டும் கவனிக்காம கீழ விழுந்ததினால வெறும் சிராய்ப்பு மட்டும் ஏற்பட்டது, அவரையும் Highways Patrol உடனே வந்து கவனிச்சிக்கிட்டாங்கன்னு இருக்கனும்.

* ஒவ்வொரு ஸைடுலயும் நாலு வழிப்பாதைகள் (Four Lanes) இருக்கனும்.

* முடிஞ்சா முழுக்க முழுக்க FLY-OVER bridgeஆ இருக்கலாம் (குறுக்க போகிற ஆடு மாடுகள் பிரச்சினை இருக்காது). சென்னையில் ஏறினால் முதல் EXIT வந்து தாம்பரம், அப்புறம் செங்கல்பட்டுன்னு இருக்கனும். நடுவுல REST AREA இருக்கனும், கூடவெ ஆம்புலன்ஸ் ஸர்வீஸ் நிறைய இருக்கனும்.

* ரோட்டுல இந்த பக்கம் நாலு பாதை. நடுவுல பலமான தடுப்புச்சுவர், அப்புறம் அந்த பக்கம் நாலு பாதைன்ன்னு இருக்கனும்.
* முடிஞ்சா இந்த ரோட்டை ஒட்டியபடியே பக்கத்துல இன்னொரு ரோடு இருக்கனும். அதுலெ இந்த பக்கம் இரு வழிப்பாதை, அந்த பக்கம் இரு வழிப்பாதைன்னு இருக்கனும். இது வெறும் பைக்ல போறவங்களுக்கான ரோடா இருக்கனும்.
* இதுக்கெல்லாம் நிறைய பணம் தேவைப்படும். நல்ல தனியார் நிறுவனங்களிடம் இந்த வேலையை விட வேண்டும். அவங்க பிறகு TOLL சார்ஜ் பண்ணிக்கலாம்.
* கோயம்புத்தூர்ல செய்யப்படற பொருள்கள் ரொம்ப ஈஸியா சென்னைக்கு ஏற்றுமதி செய்யப்பட வரனும்.
* கன்னியாகுமரி வரைக்கும் NETWORK ரொம்ப பலமா இருக்கனும்
..ம்ம் அப்புறம் முழிச்சிகிட்டேங்க...

Comments

  1. Anonymous4:52 AM

    do you provide Hindi translation for your Blog ?

    ReplyDelete
  2. Anonymous7:38 AM

    Sampath... A good one. Bharathiyar dreamt many thinks 50 years back, some of them are true today. May be, your dream will come true in another 25 years !! Vazhaga valamudam... - Hari

    ReplyDelete
  3. At this point, I don't have any plant for Hindi translation of the articles.

    Sorry about that.

    Sampath

    ReplyDelete
  4. அன்புக்குரிய சம்பத்,

    எங்கோ எதையோ தேடப்போய் இங்கே வந்தேன். நல்ல, பதிவுகள், சிந்தனைகள்.

    இந்த வார இந்தியா டுடேயில் - இந்தியாவை/தமிழகத்தை மேலும் எப்படி முன்னேற்றுவது என்பது தொடர்பான ஒரு போட்டியிருக்கிறது. உங்களது கனவுகளை (பெரும்பாலானவை எனக்கு கனவாகத் தெரியவில்லை - நடைமுறைச் சாத்தியம் அதிகம்) எழுதி அனுப்புங்களேன்.

    நீங்கள் தொடர்ந்து தமிழிலும் பதிவுகள் எழுதக்கூடாது. உங்களுக்கு தமிழ்மணம் (www.thamizmanam.com) பரிச்சயமா!? இல்லையென்றால்/ஆமென்றால் உடன் அங்கும் உங்கள் வலைப்பதிவைப் பதிந்து தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete

Post a Comment