நகைச்சுவை: அட போங்க சார்

ஜோக்: அட போங்க சார். என் பையன் மார்க்கை ரேங்க் மாதிரியும், ரேங்கை மார்க் மாதிரியும் வாங்குறான். என்னத்தை சொல்றது..!

இந்த ஜோக்கைப் பற்றி...


இது நான் முதல் முதலில் எழுதிய ஜோக். 1985 அல்லது 1986 என்று நினைக்கிறேன். ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். பிரசுரித்துவிட்டார்கள். அதுவும் முதல் முயற்சியிலேயே..!  அட்டைப்படத்தில் இந்தி நடிகை ‘ஸ்மிதா பாட்டீல்’ இருந்ததாக நியாபகம். ஓவியர் விவேக்கின் கார்ட்டூனோடு வெளியாகியிருந்தது.

அப்போது நான் பத்தாவது படித்திருந்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.


பின்னொரு நாளில், ஒரு சாயந்திரம் கணக்கு டியூஷனில் இருக்கும் போது, வாத்தியார் இதே ஜோக்கை சொல்லி ஒரு மாணவனை திட்டினார். ‘டேய், உன் மார்க்கு ரேங்க் மாதிரியும் உன் ரேங்க் மார்க்கு மாதிரியும் இருக்கேடா’ என்றார். நான் உடனே எழுந்து ‘சார், அந்த ஜோக்கை நீங்க படிச்சீங்களா சார்? அது நான் எழுதினது என்றேன். திட்டு வாங்கின பையன் என்னை முறைத்து பார்த்தது நினைவில் இருக்கிறது. ஆனால் அவன் வாங்கின மார்க்குக்கும் நான் வாங்கின மார்க்குக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை. அதே திட்டை நான் வாஙியிருந்தால் இன்னும் தமாஷாக இருந்திருக்கும்..!

Comments