நகைச்சுவை: விடா & கொடா


(கல்லூரியில் ஒரு லேக்சரருக்கும், வகுப்புக்கு லேட்டாக வரும் ஒரு மாணவருக்கும் இடையே நடக்கும் உரையாடல்)

'வாய்யா. வகுப்புக்கு வர்ற நேரமா இது? ஏன் லேட்டு?'

'லேட்டாயிடுச்சி சார்' 

'அது தெரியுதுய்யா. ஆனா ஏன் லேட்டு?'

'பஸ் லேட்டு சார்'

'இந்த கதையெல்லாம் வேணாம்யா. உங்கூட வர்ற பசங்கல்லாம் கரெக்டா வந்துட்டாங்களே. அது எப்படி?'

'அவங்க சீக்கிரமா வர்ற பஸ்ல வந்திருப்பாங்க சார்'

'அப்ப, நீ ஏன் அந்த பஸ்ல வரலை'

'அந்த பஸ் நான் வர்றதுக்கு முன்னாடியே எங்க டெர்மினஸலிருந்து சீக்கிரமா கிளம்பிடுச்சி சார்'

'அது எப்படிய்யா ஒரு பஸ்ஸை சீக்கிரமா டெர்மினஸ்ஸை விட்டு எடுப்பாங்க? அது வழக்கமா கிளம்ப்புற டைம்ல தானே கிளம்புச்சி?'

'ஆமாம் சார். ஆனாலும் நான் வர்றதுக்கு ஒரு 10 நிமிஷம் முன்னாடியே கிளம்பிடுச்சு சார்'

'இரு. இரு. அதை சரியான நேரத்துக்குத்தானே எடுத்தாங்க?'

'ஆமாம் சார்'

அப்ப நீ தான் பத்து நிமிஷம் லேட்டா போயிருக்கே'

'...'

'என்னாய்யா முழிக்கிறே? சொல்லுய்யா, ஏன்யா லேட்டா போனே?

'...'

'கேட்கிறேனில்லே, ஏன்யா லேட்டா போனே?

'லேட்டாயிடுச்சு சார்'

' ? '

By 
Sampath
09-Feb-2012

Comments